×

ஈபிஎஸ் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார்- நயினார் நாகேந்திரன்

 

ஒரு அரசு நல்ல முறையில் செயல்பட மத்திய அரசின் துணை இருக்க வேண்டும், எம்ஜிஆர் அதை நன்கு உணர்ந்தவர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பாஜக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிரார். 3ம் நாள் பயணமாக  தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள், வயதானவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது. அதுபோல் தற்கொலை அதிகரித்துள்ளது, போதை பொருள் சர்வ சாதரணமாக கிடைக்கிறது. சட்டம், ஒழுங்கு சரியில்லை. கருரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். சினிமாகாரனோ, நடிகனோ இல்லை. ஆனால் மக்கள் அதரவு தருகிறார்கள். ஆட்சி மாற்றப்படவேண்டும். 

ஒரு அரசு நல்ல முறையில் செயல்பட மத்திய அரசின் துணை இருக்க வேண்டும், எம்ஜிஆர் அதை நன்கு உணர்ந்தவர். இப்போது எடப்பாடி பழனிசாமி உணர்ந்திருக்கிறார். 4 ஆண்டுகள் மத்திய அரசிடம் இணக்கமாக இருந்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. ஸ்டாலின் ஆட்சியில் போக்சோ குற்றங்கள் 389%, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52%,  சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் 19% ஆக உயர்ந்துள்ளது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. செங்கல்பட்டுக்கு வளர்ச்சி திட்டங்கள் இல்லை. பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்றவற்றில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார்.