"சிலர் கவர்ச்சியோடு கட்சி ஆரம்பித்துள்ளார்கள்"- விஜயை மறைமுகமாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
சிலர் கவர்ச்சியோடு கட்சி ஆரம்பித்துள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “எல்லா கிளையிலும் தாமரை மலர்ந்தால் திமுக ஆட்சி இருக்காது. சிலிண்டருக்கு ரூ.100 குறைப்போம் என திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற முடியும். சிலர் கவர்ச்சியோடு கட்சி ஆரம்பித்துள்ளார்கள். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த போது சந்தர்ப்பவாத கூட்டணியாக தெரியவில்லையா? வாக்குறுதி கொடுப்பதும், ஆட்சிக்கு வந்த பின் மறப்பதும் திமுகவுக்கு கைவந்த கலை. இந்தியாவில் தீவிரவாதத்தையும், அச்சுறுத்தலையும் அழிப்பதற்கு யாரால் முடியும் என்றால் அது அமித் ஷா இல்லாமல் ஒன்றுமே நடைபெறாது” என்றார்.