☰
×

விஜய்க்கு புடவை சால்வை.. அதை கொச்சைப்படுத்தாதீங்க.. கோபத்தின் உச்சிக்கே சென்ற நயினார் நாகேந்திரன்

 

பிரதமர் மோடி பங்கேற்ற விழா மேடையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர்ந்திருந்தது குறித்து பலரும் விமர்சனம் செய்த நிலையில், அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “என்னை ஏன் மேடையில் உட்கார வச்சாங்கனு தவெக கேட்குது…. நான் ஒன்னு சொல்லுவேன்… அதுவும் சர்ச்சையாகிடும் அதனால வேணாம். VIP யாரை அழைக்கிறார்களோ அவர்கள் செல்லலாம். நான் எப்படி அந்த மேடையில் இருந்தேன் என்பது ஒன்றும் இந்த நாட்டிற்கு தேவையான பிரச்னை இல்லை. நிறைய முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதைச் சொன்னால் நான் ஏதோ முதலமைச்சர் சார்ந்தவர்களை தொடர்ந்து விமர்சிப்பது போல் ஆகிவிடும். தமிழ்நாட்டில் மின்வெட்டு நிறைய இருக்கிறது.. அமைச்சர் நிர்மல்குமார் அதை பார்க்கலாம்.

திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதும், கமலாலயத்தில் காவி நிற திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், "எங்களுக்குப் பிடித்த நிறத்தில் திருவள்ளுவர் சிலையை வைப்பதில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். பிரதமர் மோடி சென்னை வந்தபோது அவரை வரவேற்ற முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பொன்னாடை அணிவித்தார். ஆனால் அது புடவை போன்று உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலளித்த நயினார் "நான் சால்வை அணிவித்ததை எல்லாம் கொச்சைப்படுத்த வேண்டாம். ஒரு கட்சி தலைவர் என்கிற அடிப்படையில் மரியாதை செலுத்தினோம். அதை கொச்சப்படுத்தாதீர்கள்” என்றார்.