முதலமைச்சரின் லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் செல்லாதது ஏன்? - நயினார் நாகேந்திரன்
முதலமைச்சரின் லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் செல்லாதது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டிற்கு புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதும், முதலீடுகளை ஈர்ப்பதும் தொழிற்துறை அமைச்சரின் முக்கிய கடமை. ஆனால் தற்போது முதலமைச்சரின் லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் உடன் செல்லாதது ஏன்?முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்த முழு விவரங்களையும் வெளியிட வேண்டும். அவருடன் யார் சென்றுள்ளனர், அரசு சார்பில் யார் யார் சென்றுள்ளனர்? முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் சென்றிருந்தால், எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டிற்கு எத்தனை கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கிறார்களா, எதிர்க்கிறார்களா? தெளிவாக சொல்ல வேண்டும். ஆதரவு என்றால் காரணம் சொல்ல வேண்டும். எதிர்ப்பு என்றால் அதற்கான காரணமும் சொல்ல வேண்டும். விஜய்க்கு ஆதரவாக இருந்தாலும் சரி, வேறு யாருக்கு ஆதரவாக இருந்தாலும் சரி-நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அது கொள்கை அரசியல் அல்ல... சந்தர்ப்பவாத அரசியல்” என்றார்.