×

"கரூருக்கு விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம்"- நயினார் நாகேந்திரன்

 

என்னைப் பொருத்தவரை கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜயும் ஒரு காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

திண்டிவனத்தில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார்  நாகேந்திரன் மலர் தூவி  மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்  என்ன செய்து கொண்டிருக்கின்றார்? தமிழகத்தில் குற்றங்களைத் தடுப்பதை விட்டுவிட்டு, ஆளுநரை வைத்து முதலமைச்சர் அரசியல் செய்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில் அதை கவனிக்காமல் முதல்வர் விஜய் குதிரை பேரம் செய்கிறார். தவறு செய்பவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ஆளுநரை வைத்தே அரசியல் செய்கின்றனர்.. மக்களுக்கு நல்லது செய்வதில் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும்.


கரூருக்கு பகல் 12 மணிக்கு வருவதாக சொன்ன விஜய் இரவு 7 மணிக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை கரூர் சம்பவத்திற்கு விஜயும் ஒரு காரணமாக இருப்பார். கரூர் மக்களை 7 மணி நேரம் விஜய் காக்கவைத்த நிலையில் மக்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அவ்வளவு உயிரிழப்புகள் நடந்தபிறகும் அந்த மக்களை சந்திக்காமல் சென்னை சென்றார் விஜய்” என்றார்.