“ஜோசப் விஜய் ப்ரோ... எத்தனை நாள் உங்கள் ஆட்சி தாங்கும்?” - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் பல்வேறு குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர், இதை தடுக்க தவறிய முதுகெலும்பில்லா முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “3 வயது குழந்தைக்கு யார் பதில் சொல்வார்கள்? எத்தனை நாட்கள் உங்கள் ஆட்சி தாங்கும்? சட்டம், ஒழுங்கு சரியில்லை. ஜோசப் விஜய் ப்ரோ, உங்களுக்கு காது கேட்கிறதா? தவெக ஆட்சி ஒரு விஷக்கிருமி. விஜய் முதுகெழும்பு இல்லாத முதல்வர். சட்டத்தை பாதுகாக்க தவறிய முதல்வர் விஜய் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விட்டு, குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களைக் கைது செய்வது அப்பட்டமான பாசிசப் போக்கு. தி.மு.க ஆட்சிக்கும் - த.வெ.க ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழகத்தில் பல்வேறு குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர், இதை தடுக்க தவறிய முதுகெலும்பில்லா முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
48 மணிநேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. 15 போக்சோ குற்றங்கள் நடந்துள்ளன. திமுக ஆட்சிக்கும், தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 3 வயது குழந்தையின் பெற்றோரை தவெக எம்எல்ஏ மிரட்டுகிறார். சிறுமியின் பெற்றோரை அழைத்து தவெக எம்எல்ஏ கைநாட்டு வைக்கிறார். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கை கண்டித்துவரும் 18ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒரு மாதம்தான் ஆகிறது விமர்சிக்கக்கூடாது என்று பார்த்தோம். நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகமாகிவிட்டன. காவல்துறை முற்றிலும் கெட்டுப்போய்விட்டது. அதற்கு காரணம் CM விஜய்தான்” என்றார்.
-