“என்னைப் பொருத்தவரை விஜய் எந்த தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார்”- நயினார் நாகேந்திரன்
என்னைப் பொருத்தவரை விஜய் எந்த தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “கருத்துக்கணிப்பு முறையாக இருந்தால் அதன் மீது நம்பிக்கை இருக்கும் பல நேரங்களில் கருத்து திணிப்பாக தான் உள்ளது , கருத்துக்கணிப்பை பற்றி இப்ப பேச வேண்டிய அவசியம் இல்லை. மே நான்காம் தேதி மக்களுடைய உண்மையான கருத்து கணிப்பு, உண்மையான எண்ணங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த அரசு மீது அதிருப்திதான் உள்ளது இந்த அரசு இருக்க கூடாது என்ற மாற்றம் அனைவர் மத்தியிலும் உள்ளது.
என்னைப் பொருத்தவரை விஜய் எந்த தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார். ஆகையால் அவருடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பே இல்லை. பக்கத்து நாடுகளில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு கிடைக்கவே இல்லை, ஆனால் இந்தியாவில் கிடைக்கிறது. இந்தியா உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுடைய நட்பு நாடு , கேஸ் விலை ஏற்றமாக இருந்தாலும் சரி, பெட்ரோல், டீசல் விலை ஏற்றமாக இருந்தாலும் சரி மக்களுடைய நலன் கருதி எல்லா முடிவுகளையும் பாஜக எடுக்கும். நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அதனால் அமைதியாக இருக்கிறோம்” எனக் கூறினார்.