“போதைப்பொருள் விற்று, துபாய்க்கு ஓடியவர்கள் ரெட் ஜெயிண்ட்ஸ் மூலம் இன்று படம் எடுக்கிறார்கள்”- நயினார் நாகேந்திரன்
போதைப்பொருட்கள் விற்று, துபாய்க்கு ஓடியவர்கள் எல்லாம் ரெட் ஜெயிண்ட்ஸ் மூலமாக இன்று படம் எடுக்கிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை தெற்கு தொகுதிக்கு பாஜக எம்எல்ஏவை தேர்வு செய்தால் தான் உங்களுக்கு மெட்ரோ திட்டம் கிடைக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதற்கு உறுதிமொழி எடுத்த முதல்வர் இப்படி பேசுவது சரியா என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நமது முதல்வர் எப்பொழுதுமே வார்த்தை ஜாலங்களால் திரித்து சொல்லக்கூடியவர். சட்டமன்ற தொகுதியை கொடுத்தால் மத்திய அரசின் எந்த திட்டங்களானாலும் உங்களுக்கும் வந்து சேரும் என்ற பாணியில் தான் மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்தார். மெட்ரோ திட்டத்திற்கு விரிவான தகவல் திட்ட அறிக்கை கேட்டபோது தமிழக அரசு தவறான திட்ட அறிக்கையை கொடுத்தது. சரியான திட்ட அறிக்கையை கூட வழங்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது
கஞ்சா போதையில்தான் கவனத்தை செலுத்துகிறார்கள், நாட்டின் வளர்ச்சிக்காக கவனம் செலுத்துவதில்லை. போதைப்பொருள் விற்றவர்கள் எல்லோரும் தற்போது ரெட் ஜெயின்ட் மூவி மூலம் சினிமா தயாரித்து கொண்டு இருக்கிறார்கள். துபாய்க்கு ஒழிந்து ஓடியவர்கள் தற்போது ரெட் ஜெயின்ட் மூவி மூலம் சினிமா தயாரித்து கொண்டிருக்கிறார்கள். சாத்தூர் தொகுதியில் முழு கவனத்தை செலுத்த போகிறேன். சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான மக்கள் வளர்ச்சி, மருத்துவம், தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்வேன். சுதந்திர இந்தியாவில் யார் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம், எல்லோருக்கும் உரிமை உள்ளது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். விஜய் கூட்டம் நடத்தும்போது சரியான முறையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விஜய்க்கு பரப்புரை ஏற்பாடுகளை சரியாக செய்ய தெரியவில்லை. திமுகவை பொறுத்தவரை அடக்குமுறை ஆட்சி, "ம் என்றால் வனவாசம் ம் என்றால் சிறைவாசம்" இதுதான் திமுகவின் அடக்குமுறை.
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என முதல்வர் நினைக்கிறார் . ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான போர்க்களம். ஒருமுறை திமுக மைனாரிட்டி ஆட்சி அமைத்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மைனாரிட்டி திமுக ஆட்சி என்று சொல்லி வந்தார். அதற்குப்பின் தமிழகத்தில் அது போன்ற மைனாரிட்டி ஆட்சி அமையவில்லை. தமிழகத்தில் இந்த முறை தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. பெரும்பான்மையான இடங்களில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.