×

``நெல்லை தொகுதி விட்டுக்கொடுத்த‌து ஏன்?''- நயினார் நாகேந்திரன் விளக்கம்

 

அதிமுகவினர் கேட்டுக் கொண்டதால் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்து, தொகுதி மாறியுள்ளேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளிக்கம் அளித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “வர இருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷா, இபிஎஸ்  ஆகியோர் சேர்ந்து உருவாக்கப்பட்டது தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஆளுங்கட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. ஏப்ரல்23ஆம் தேதி எப்பொழுது வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டுமென தமிழக மக்களை பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். கோவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவில்லை. பியூஸ் கோயல் இன்று மாலை சென்னைக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து பணிகள் நடைபெற இருக்கிறது. 

எங்கே நின்றாலும் திருநெல்வேலிக்கு நான் தான் செல்ல பிள்ளை.ஏற்கனவே பலமுறை நெல்லைத் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன். இந்த முறை அதிமுக போட்டியிட வேண்டும் என்று கேட்டார்கள், அதனால் கொடுத்திருக்கிறேன். வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதத்திற்கு ஒரு காரணமும் இல்லை. 27 தொகுதிகளை மட்டும் பெற்று இருக்கிறோம். தொகுதிகளின் எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. எண்ணம் தான் முக்கியம். பியூஸ் கோயல் ஒன்றிய அமைச்சரிடம் மிகப்பெரிய குற்றப்பத்திரிக்கையை நாங்கள் இன்று தாக்கல் செய்ய இருக்கிறோம். கோவை வந்த பிரதமரை வரவேற்க அண்ணாமலை அண்ணாமலை வரவில்லை. உடனே அண்ணாமலைக்கு நான் தொலைபேசியில் அழைத்தேன். அவர் ஊரில் இல்லை என்று கூறினார்கள். வேறு எதுவும் இல்லை. பிரதமர் மோடியை கொலை செய்வேன் என்று திமுக நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார், அவர் மீது நடவடிக்கை இல்லை. வனவாசம் யாருக்கு என்பது 23ஆம் தேதி தெரியும். லாக் ஆப் டெத் சாத்தான்குளத்தில் இருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். ஐயோ அம்மா என்று கூப்பாடு போட்டார்கள், இன்றைக்கு 32 லாக்கப் எடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போன தேர்தல் அறிக்கை ஹீரோ மாதிரி. இந்த தேர்தல் அறிக்கை சீரோ.இந்த தேர்தல் அறிக்கை ஹீரோயின் அல்ல ஹீராயின். 180 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வந்திருக்கிறது. 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று எனது கருத்துக்கணிப்பு” என்றார்.