“ஆதவ் அர்ஜுனா யார் என்றே எனக்குத் தெரியாது”- நயினார் நாகேந்திரன்
ஆதவ் அர்ஜுனா யார் என்றே எனக்குத் தெரியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ஓரிரு தினங்களில் பியூஸ் கோயல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொகுதி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பதை பிறகு சொல்கிறேன். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. நாமினேசன் செய்வதற்கே 10 நாட்கள் டைம் இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் அதிக முறை கூறிவிட்டோம், ED, Incometax அனைத்துமே தனித்தனியாக செயல்படுபவர்கள். சம்பந்த இல்லாதவர்களுக்கு ED வராது.
விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே திமுக அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. அதை வைத்து எப்படி மிரட்ட முடியும்? நான் ஏற்கனவே கூறிவிட்டேன், தமிழக பாஜகவின் தலைவர் நான் யாரோடும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஏன் தவெகவினர் இப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில புதிய கட்சிகள் வரலாம். அவர்களும் யாரும் என்னுடன் பேச்சுவார்த்தை செய்யவில்லை, இல்லாத பட்சத்தில் ஒரு பிம்பம். அது தேவையில்லை. ஆதவ் அர்ஜுனாவை எனக்கு தெரியாது. பிரதமர் மோடி கோவை மற்றும் கன்னியாகுமரிக்கு வர இருக்கிறார். தேதி இன்னும் முடிவு செய்யவில்லை.
பாஜக ஒரு மதத்தை சார்ந்த கட்சி இல்லை. திமுக தான் ஒரு மதத்தை சார்ந்த கட்சி” என்று கூறினார்.