×

த்ரிஷாவிடம் அமித்ஷா பேச்சுவார்த்தையா?- நயினார் நகேந்திரன் பேட்டி

 

ரஜினிகாந்த் பற்றி பேசிதற்கு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

அதிமுக சார்பில் தேசிய ஜனநாயகியின் கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரையில் திமுக அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மதுரைக்கு வருகை தந்தார்.  அவர் தங்கி இருந்த தனியார் விடுதியில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சட்டமன்ற தேர்தலில் Nda கூட்டணி Eps தலைமையில் சந்திக்கிறோம். திமுக அரசு எந்த அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை.தவறான திட்டத்தை பரப்பி உதயநிதியை முதல்வராக்க முயற்சி. அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வு திட்டத்தை அடுத்த ஜூன் மாதம் என சொல்லி மக்களை திசை திருப்புகிறார். அதிகாரத்தை பலத்தை வைத்து ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறார்கள் அது நடக்காது. கொலைகள் அதிகரித்து உள்ளது தமிழ்நாடு காவல்துறை எதுவும் செய்யவில்லை.2 லட்சம் கிலோ கஞ்சா இது வரை பிடிபட்டுள்ளது. திமுக தேர்தல் வரும் போது ஒவ்வொரு யுத்தியை கையாளுவார்கள். ஹிந்தி இருந்தால் இருந்துட்டு போகட்டும் நமக்கு தேவை தமிழ் இருக்க வேண்டும் ஆனால் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். மொழி தெரியாமல் வட இந்தியர்கள் இங்கு வந்து தமிழ் படிக்கிறார்கள் ஹிந்தி அழிப்பதனால் பெரிய லாபம் ஒன்றும் கிடையாது

தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு உள்ளே வருமா வராதா? என்பதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. திரிஷா அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை ஈடுபடுவதாக பத்திரிக்கை செய்தி கூறுகிறது. ஆனால் அது பற்றி தெரியாது. விஜய் ஏன் ஆதவ் அர்ஜுனாவை கண்டிக்கவில்லை. மதிப்பிற்குரிய திரையுலகில் முடி சூடா மன்னன் ரஜினிகாந்த் அவர்களை அவர் நடிப்பின் இமயம் மட்டுமல்ல, மிகச்சிறந்த ஆன்மீகவாதி. மொழி இனம் அனைத்தையும் கடந்து அனைவரும் நேசிக்கக் கூடிய சித்த புருசராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவரை விமர்சனம் செய்வது வருந்தத்தக்கது, வேடிக்கையானது. இதை அந்த கட்சித் தலைவர் ஏன் கண்டிக்கவில்லை. ரஜினிகாந்தின் ரசிகர்கள் இதனை மன்னிக்க மாட்டார்கள் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் 15 நாட்கள் இருக்கிறது சுமூகமாக நல்ல முடிவு எடுக்கப்படும். கூட்டணி உள்ளே புதிய கட்சி வருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தலில் பணம் பலம் ஜெயிக்காது, மக்களின் மனம் பலம் ஜெயிக்கும். விஜய் மிரட்டுகிறார்கள் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.