×

“இன்று மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும்  இல்லந்தோறும் கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும்”- நயினார் நாகேந்திரன்

 

தமிழகம் முழுவதும்  இல்லந்தோறும் கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும் என மக்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்று மாலை 6:00 மணிக்கு தமிழக மங்கும் வாழும் முருக பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும் வீதிகளிலும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளேன். திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்ற இறைவன் அருள வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம்.  2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறோம். ஏற்கனவே திமுக கூட்டணியில் இருப்பவர்கள் தான் தற்பொழுதும் இருக்கிறார்கள். கூடுதலாக ஒருவர் சேர்ந்து இருக்கிறார். அதை மின்னல் வேகம் என்று சொல்ல முடியாது. ஆட்சியமைக்க போவது யார் என மக்கள்தான் முடிவேடுப்பார்கள். 
 
பிரதமருக்கு எதிராக தென்காசியில் திமுக பிரதமர் ஒருவர் பேசியிருக்கிறார். அவரை இன்னும் கைது செய்யவில்லை. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெறும்போது  அனைவரையும் அழைத்து தெரிவிப்போம். 2026 வளமான மாற்றத்தை தமிழக மக்கள் பார்ப்பார்கள்” என்று கூறினார்.