×

ஓபிஎஸ் இல்லாமலேயே NDA பலமாகதான் உள்ளது - நயினார் நாகேந்திரன் 

 

பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைவதாக வந்த தகவலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.


ஓபிஎஸ் இணைந்தால் NDA கூட்டணி இன்னும் பலமாகுமா என்ற கேள்விக்கு இப்போதே பலமாக உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். ஓபிஎஸ் வராவிட்டால் பரவாயில்லை என கூறுகிறீர்களா என்றதும், அப்படி எல்லாம் இல்லை என்றும் கூறினார். திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட ஒரே கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் எனக் கூறிய அவர், பாஜகவில் ஊழல் இல்லை. அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை, தவெகவில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட விஜய்க்கு தெரியாது. விஜய்க்கு பாஜக எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, பாஜகவில் ஊழல் இல்லை, தீய சக்தி இல்லை எனக் கூறினார்.