×

“திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறவே விஜய்க்கு ராகுல் ஆதரவு”- நயினார் நாகேந்திரன்

 

ராகுல்காந்தி விஜயைவிட மிகப்பெரிய நடிகராக செயல்படுகிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “திமுகவிடம் அதிக இடங்களை பெறவே விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். ராகுல் காந்திக்கு கடுமையான கண்டனம் சென்சார் போர்டுக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள  பிரச்சனையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் அரசியலுக்காக ராகுல் காந்தி இவ்வாறு கருத்து கூறியுள்ளார். திமுகவை மிரட்டவே ராகுல் காந்தி இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறவே இவ்வாறு ராகுல் காந்தி பேசுகிறார் நடிகர் விஜயை மிகப்பெரிய நடிகர் அவரை விட ராகுல் காந்தி மிகப்பெரிய நடிகர் போல் நடிக்கிறார். 

கள்ளச்சாராயம் வேங்கைவயல் உள்ளிட்ட பிரச்சினைக்கு குரல் கொடுக்காமல் இப்போது மட்டும் பேசுவது ஏன்? விஜய் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. 23ம் தேதி மோடி தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டு மேடையில் உள்ளவர்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை. காங்கிரஸ் கட்சி செய்வதையெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம். திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். ” என்றார்.