×

"பிரதமர் வருகையின் போது கூட்டணி இறுதி செய்யப்படும்”- நயினார் நாகேந்திரன் 

 

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்டமான மாநாடு சென்னையில் நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “Censor Board என்பது தனி அமைப்பு, அதற்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆகையால் எங்களுக்கும் ஜனநாயகன் படத்தின் தடைக்கும் சம்மந்தம் இல்லை. பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்டமான மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் பங்கேற்புடன் வரும் 23ஆம் தேதியன்று மாநாடு நடைபெற உள்ளது. யார் யார் கூட்டணியில் உள்ளனர் என்பது பிரதமர் மோடி வரும்போது தெரியும்” என்றார்.