"காங்கிரஸும், விசிகவும் தவெகவுடன் கூட்டணிக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்"- நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றத்தில் எந்த இஸ்லாமியர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மதம் சார்ந்த பிரச்சனை எதுவும் இல்லை, ஆனால் அங்கு கலவரத்தை தூண்டுவது திமுக தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை புரிந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பக்கத்திற்குட்பட்ட அம்மையார் குப்பம் பகுதியில் பாஜக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதற்காக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதில் கலந்துகொள்ள வருகை புரிகிறார். அதற்கு முன்னதாக திருத்தணி சுப்பிரமணியசாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தான் தமிழர்கள் தான் பதில் அளித்து வருகிறேன். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது அந்த வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்றுவதற்காக முயன்ற போது காவல்துறை அதை தடுத்து நிறுத்தினர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் இதில் இஸ்லாமியரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை வேறு எந்த ஒரு உள்ளாக்கம் இல்லை. ஆனால் கலவரம் கலவரம் என்று சொல்லி கலவரத்தை தூண்டுவது திமுக தான். ஆனால் முதலமைச்சர் நேற்று மதுரையில் இது எடுபடாது எது எடுபடாது என்று தெரியவில்லை.
எல்லா மதத்தவினரும் அவர்களுடைய மத வழிபாட்டு முறையில் வழிபடலாம். நான் இந்து மதத்தை வணங்கும்போது வேறொரு மதத்தை வணங்க வேண்டாம் என்று என்றும் நாங்கள் சொல்வதில்லை. ஆனால் இதை நான் தமிழில் தான் எடுத்துரைக்கிறேன். திமுகவிற்கு தான் இது புரியவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெற என்னென்ன என்னுடைய தரப்பில் நான் கூறுகிறேன். கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. 32 மாவட்டங்களில் யாத்திரை நிறைவடைந்துள்ளது, அந்தந்த கிராமங்களில் என்னென்ன தேவைகள் இருப்பது குறித்து கிராம சபை கூட்டங்கள் மூலமாக கேட்டு அறிந்து வருகிறோம். அதன் மூலம் தீர்வு காணப்படும். காங்கிரஸும், விசிகவும் தவெகவுடன் கூட்டணிக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். கல்வியில் புகழ்பெற்ற தமிழ்நாடு தற்போது கஞ்சாவில் புகழ்பெற்ற தமிழ்நாடாக மாறியுள்ளது” என்றார்.