திருப்பரங்குன்றம் மலையை நோக்கிச் சென்ற நயினார் நாகேந்திரன் தடுத்து நிறுத்தம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் உணவு விடுதியில் இருந்து திருப்பரங்குன்றம் திருக்கோவிலுக்கு செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தீபத்தூணை எல்லை கல் என்று சொல்கிறார்கள், அரசு வழக்கறிஞர்களுக்கு அறிவு இருக்கிறதா? என்று தெரியவில்லை. திமுக அழிவு காலம் நெருங்கி விட்டது கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. முருகன் வேல் எடுத்து கிட்டப் போய்விட்டார் என்று சூரசம்காரம் நிச்சயமாக நடக்கும்.
மாண்புமிகு நீதி அரசர் ஏற்கனவே சொன்ன தீர்ப்பை அதே தீர்ப்பை இன்றை மேல்முறையீட்டில் சொல்லி இருக்கிறார்கள். அதில் அரசாங்கம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். போலி மதச்சார்பின்மை தேவையில்லாத பதட்டமான சூழ்நிலை இந்த பெரும்பான்மை சமுதாயத்தின் மீது ஏவி விடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அமைப்புகள் எல்லோரும் மிகவும் வருத்தப்படுகிறார்கள். தர்காவில் எந்தவித பிரச்சனையும் இல்லை யாரும் அங்கு போய் பிரச்சனை செய்ய மாட்டார்கள், அவசியமும் இல்லை. இது தீபத்துண், ஆனால் அரசு வழக்கறிஞர்கள் எல்லைத் தூண் என்கிறார்கள். அவருக்கு அறிவு இருக்கிறதா என்பது தெரியவில்லை. எல்லை கல் நாலு பக்கமும் இருக்க வேண்டும். தீபத்தூண் நடுவில் ஒரு பக்கம் இருக்கும் போலி மதசார்பன்மையை இந்த அரசாங்க வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆயுள் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது” என்றார்.