×

“செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறானது! எல்லாமே திமுக சொல்லி தான் செஞ்சிருக்கார்”- நயினார் நாகேந்திரன்

 

செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறானது, செங்கோட்டையன் ஒரு பெரிய தலைவர் மாற்று கருத்து இல்லை யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்தான் மரியாதையாக இருக்கும். செங்கோட்டையன் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார் நாங்கள் ஏற்கனவே அவரை மதிப்போம் இனிமேலும் அவரை மதிப்போம், ஆண்ட கட்சியில் தான் மாவட்டச் செயலாளராக அமைச்சராக செங்கோட்டையில் இருந்தார் அப்படி இருந்துவிட்டு தற்போது தூய்மையான ஆட்சி குறித்து அவர் பேசுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “செங்கோட்டையன் ஒரு பெரிய தலைவர், மாற்று கருத்து இல்லை. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்தான் மரியாதையாக இருக்கும். செங்கோட்டையன் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். நாங்கள் ஏற்கனவே அவரை மதிப்போம், இனிமேலும் அவரை மதிப்போம். 1972ல் எம்ஜிஆர் கட்சி 1977ல் முதலமைச்சர் ஆகினர். அவர் முதலமைச்சராக இருக்கும் வரை திமுகவில் வெற்றி அடைய முடியவில்லை. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் குறித்து அப்படி கூறியிருக்க கூடாது. சபாநாயகர் இருந்து கொண்டு சாதாரணமாணவர்களை போல் அவர் அவ்வாறு குடியிருப்பது வருந்தத்தக்க ஒன்று. ஆண்ட கட்சியில் தான் மாவட்டச் செயலாளராக, அமைச்சராக செங்கோட்டையில் இருந்தார். அப்படி இருந்துவிட்டு தற்போது தூய்மையான ஆட்சி குறித்து அவர் பேசுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?

செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதலமைச்சர் உத்தரவுப்படி அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு தான் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். எனவே முதலமைச்சர், திமுக அறிவுரைப்படி செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.  பாஜக மேலிடம் தன்னை அழைத்தது அதன் பெயரில் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்ததாக செங்கோட்டையன் முதலில் கூறினார். அதன் பின்னர் அவரே அதை மறுத்தார். அதிமுக எல்லா காலகட்டத்திலேயும் ஒரு சில நேரங்களில் இடர்பாடுகள் ஏற்படும், அந்த இடர்பாடுகளை தாண்டி தான் மீண்டு அதிமுக வளர்ந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளார்


கஞ்சா புழக்கம், போதை பொருள் அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து குற்ற செயலுக்கும் போதை தான் காரணமாக இருந்து வருகிறது. மேலும் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் வேறு குற்றவாளிகள் சுட்டு பிடித்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிமுகவிலிருந்து ஒவ்வொரு தலைவர்கள் பிரிந்து சென்றுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகிய பாதி பேர் திமுகவில் சேர்ந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.