×

நயினாருக்கு கறுப்பு கொடி காட்டிய பெண்! காவலர்கள் மல்லுக்கட்டியதில் மயங்கினார்

 

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக பாஜக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கருப்பு கொடி காட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி வைஷாலியை கும்பலாக சேர்ந்து தடுத்து நிறுத்திய பெண் காவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 


உதகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கருப்பு கொடி காட்டிய முன்னாள் நிர்வாகியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பாஜக விவசாய அணி துணைச் செயலாளராக இருந்த வைஷாலியின் செயலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பாஜகவை விட்டு நீக்கிய நிலையில் நியாயம் கேட்டு வைஷாலி கோஷம் எழுப்பினார். காவல்துறையினர் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தியதால் முன்னாள் பெண் நிர்வாகி வைஷாலி மயக்கமடைந்தார்.