×

இன்னொரு மொழி தெரியாமல் பல முறை கஷ்டப்பட்டிருக்கிறேன்: எல்.முருகன் பேச்சு!

மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது அனைவரும் அறிந்தவை தான். முதல்வர் பழனிசாமி உட்பட அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையும் மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின்
 

மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது அனைவரும் அறிந்தவை தான். முதல்வர் பழனிசாமி உட்பட அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையும் மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர்கள் பிரிவின் அறிமுக கூட்டம் கமலாலயத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு தேசிய கல்விக் கொள்கை இருப்பதாகவும் அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் இல்லாது மற்றொரு மொழியையும் கற்க வழிவகுப்பதாகவும் தான் பல முறை இன்னொரு மொழி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும், சட்டசபையில் பாஜக விரைவில் அமர போகிறது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் பாஜக இருப்பதாகவும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தது உத்வேகம் அளிப்பதாகவும் கூறினார்.