மோடி பங்கேற்கும் கூட்டத்தின் பேனரில் ஓபிஎஸ், பிரேமலதா புகைப்படங்கள் இல்லை
பிரதமர் நாளை (ஜன.23) பங்கேற்கும் மதுராந்தகம் கூட்டத்தின் பேனரில் ஓபிஎஸ், பிரேமலதா புகைப்படங்கள் இல்லை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை 23 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அறிவிப்பு பொதுக்கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகின்றது பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ள நிலையில் மதுராந்தகம் கூட்டத்தின் பேனரில் ஓபிஎஸ், பிரேமலதா புகைப்படங்கள் இல்லை.
இதேபோல் மதுராந்தகத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்ட பேனரில் மாம்பழச்சின்னம் இடம்பெற்றுள்ளது. மாம்பழ சின்னத்துக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி இருதரப்புமே சொந்தம் கொண்டாடும் நிலையில், மாம்பழ சின்னம் தங்களிடமே உள்ளதாக ராமதாஸ் கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் பொதுக்கூட்டத்தின் மேடையில் அன்புமணி படத்துடன் சின்னம் இடம்பெற்றுள்ளதால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.