×

காவிரி தனித்தீர்மானம் முழுமையாக இல்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

 

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் மத்திய அரசை முழுமையாக குறை கூறுவதைப்போல் உள்ளது என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.  

இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் மத்திய அரசை முழுமையாக குறை கூறுவதைப்போல் உள்ளது என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.  பேரவையில் எனது பேச்சை சபாநாயகர் தவறாக பதிவு செய்துள்ளார். பதில் சொல்ல வாய்ப்பளிக்காமல் எனது மைக் அணைக்கப்பட்டது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது காவிரி பிரச்னை இல்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரச்னை எழுந்துள்ளது. ஒரு மாநில அரசு அதன் கூட்டணியில் இருக்கும் பிற மாநில அரசிடம் வலியுறுத்தி காவிரி நீரை பெற்றுத்தர முடியவில்லை என்றால், எதிர்காலங்களில் "இந்தியா" கூட்டணி மக்களுக்கு என்ன நன்மை செய்யும்? காங்கிரஸை விட்டுவிட்டு மத்திய அரசை குறைசொல்வது என்ன நியாயம்? ஆக்கப்பூர்வமான தீர்வை வழங்குவதுதான் நல்ல அரசியல் கட்சிக்கு அழகு. இவ்வாறு கூறினார்.