மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டிய மகாகவி பாரதியை போற்றுவோம் - வானதி சீனிவாசன்
Dec 11, 2023, 11:40 IST
மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டிய மகாகவி பாரதியின் பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குகிறேன் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பாரதியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பாரதியாரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.