×

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

 

கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், பாஜக எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.