×

விஜய்யை கூட்டணிக்குள் இணைக்க அமலாக்கத்துறை மூலம் பாஜக பயமுறுத்தலாம்- திருநாவுக்கரசர்

 

ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்தை வைத்தோ ஒரு தலைவருக்கு கூடுகின்ற கூட்டத்தை வைத்தோ தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை அது திடமாகத் தான் இருக்கிறது. அதிமுக கூட்டணிக்குள்ளையே குழப்பம் இருக்கிறது அதனை சரி செய்வதற்கு பதிலாக எங்கள் கூட்டணியில் குழப்பம் இருக்கிறது என்று ஏன் எடப்பாடி பழனிசாமி கூறிக்கொண்டு வருகிறார்? அரசியலில் கூட்டணியில் சேர சொல்லி பதவியில் இருப்பதால் அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு இலக்காக்கள் அவர்கள் கையில் இருப்பதால் நிர்ப்பந்தம் கொடுக்கலாம். அப்படி நிர்பந்தம் கொடுப்பதற்கு பயந்து நெளிந்து விஜய் போறாரா என்பது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம், அப்படி யாரையும் பயமுறுத்தி அச்சுறுத்தியெல்லாம் கூட்டணியை உண்டாக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது மாதிரி செய்து கூட்டணி அமைத்தால் நீடித்து இருக்க முடியாது.

விஜய் கட்சி தொடங்கும் பொழுது அரசியலில் முதல் முறையாக பயணிக்கிறார், அவர் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டும் என்று 50 ஆண்டுகாலம் நான் அரசியலில் இருப்பதால் அந்த அனுபவத்தில் கூறியிருப்பேன். காங்கிரஸ் கட்சி மத்தியிலும் ஆட்சியில் இல்லை, மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் விஜய் காங்கிரசை பற்றி திட்டாமல் பேசாமல் இருக்கலாம் அதற்காக காங்கிரஸ் ஏன் திட்டவில்லை என்று அவரிடம் கேட்டா திட்டு வாங்கவா முடியும். அவர் காங்கிரசை திட்டாத வரை விமர்சிக்காத வரை சந்தோசம் மகிழ்ச்சிதான். காங்கிரசை விஜய் திட்டாமல் இருப்பதற்கு நன்றி. பக்குவம் முதிர்ச்சி எல்லாமே அனுபவங்கள் தருவதுதான் எடுத்தவுடன் கனியாகவே ஒரு மனிதன் இருக்க முடியாது, அதனால் விஜய் தற்போது தான் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்குள்ள அனுபவத்தை வைத்து தான் கட்சி நடத்துகிறார். போகப் போக அவருக்கு அனுபவங்கள் வரலாம். நாம் அதோடு தேர்தல் நேரத்தில் மக்கள் கொடுப்பதுதான் பெரிய அனுபவமாக இருக்கும், எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய கூட்டணியை வாழ்த்துவார் என்று எதிர்பார்க்க முடியாது அவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் விமர்சனம் செய்யத்தான் செய்வார். முதலில் அவருடைய கூட்டணி எப்படி இருக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏற்கனவே பாஜகவில் இல்லை என்று கூறினார், இதுபோன்று நிறைய பிரச்சனைகள் அங்கேயும் இருக்கிறது. இன்னும் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. அவர் தனியாக ஒன்று கூறி வருகிறார். சமீபமாகத்தான் அண்ணாமலை எடப்பாடி ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளில் அதிமுகவில் இருந்து சென்ற டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கையில் அந்த கூட்டணி முறையாக ஒழுங்காக இருக்கிறது என்ற அர்த்தம்.  ” என்றார்.