தேர்தல் வாக்குறுதியில் 10% வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை- ஹெச். ராஜா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஹெச்.ராஜா, “ 2004 க்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளவில்லை. இதனை ஒட்டிய தற்போது இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் சிறுபான்மையினர் முஸ்லிம்கள் ஆகியோர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பிதற்றி வருகிறார்கள். யாருடைய பெயரும் நீக்க முடியாது, அனைத்து கட்சிகளுக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளதால் அவர்களும் இந்த திருத்த பணியில் கலந்து கொள்ள உள்ளனர். இப்பணி முடிந்தவுடன் மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்பு ஒரு மாதம் கழித்து தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் ஆட்சபனை இருந்தால் வாக்காளர்கள் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே திமுக அரசு போய் பித்தலாட்டங்களை நிறுத்திவிட்டு தேர்தலில் கொடுத்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் ஐந்து சதவீதம் 10% நிறைவேற்று உள்ளீர்களா? என பார்க்க வேண்டும் தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய சாராயக்கடைகள் மூடப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும், மின் கட்டண கணக்கீடு மாதத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் எனக் கூறிய எந்த ஒரு வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே பொய் சொல்லி மக்களை சுரண்டும் தீய அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் தூக்கி எறியப்படும் என்ற பயத்தில் தான் தற்போது பல்வேறு பொய்களை கூறி வருகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் திமுக அரசால் தாக்கப்படுகிறார்கள் என பிரதமர் உண்மையை கூறியுள்ளார். ஆனால் இதனை தமிழர்களுக்கு எதிராக பிரதமர் பேசி உள்ளார் என திமுகவினர் கூறுகிறார்கள். தமிழுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழுக்காக செயலாற்றி வரும் பிரதமரை பற்றி பொய் சொல்லுகின்ற தீய செயலில் ஈடுபடுகின்ற முதல்வரின் செயல் கண்டிக்கத்தக்கது” என்றார்.