×

"நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

 

NEETன் பலன் ZERO என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3வது சுற்றுக் கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.