கோவை வடக்கு தொகுதி பா.ஜ.வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்..!
Apr 6, 2026, 13:25 IST
கோவை வடக்கு தொகுதி பா.ஜ.வேட்பாளர் வானதிசீனிவாசன் கோவை தடாகம் சாலையிலுள்ள, வேளாண் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நல்வாழ்த்துகளுடனும், மக்களின் பேராதரவுடனும் இன்று கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தேன்.
இந்நிகழ்வில் ராஜஸ்தான் முதல்வர் திரு. ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக வடவள்ளி சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி!