×

"ஆதவை தவெகவில் இருந்து விலக்கினால் விஜய்க்கு நல்லது'- அர்ஜூன மூர்த்தி

 

விஜயின் அரசியல் பயணம் வளர வேண்டும் என்றால் ஆதவ் அர்ஜூனாவை தவெகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய், தங்களின் அரசியல் தொடக்கம் தமிழகம் முழுவதும் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்திய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியலில் புதிய குரல்கள் எழுவது ஜனநாயகத்திற்கு நல்லதே. ஆனால் அந்த ஆரம்ப உற்சாகம் அரசியல் புரிதல், அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமான உண்மை. தங்களின் கட்சி நிர்வாகிகள் சிலர், குறிப்பாக ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள், அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துக்களால் தேவையற்ற மோதல்களையும் மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழி போல, தங்களுக்கே ஏற்படும் மரியாதையையும் பேச்சுகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.