×

மாதம் 3 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டும் திமுக வட்ட செயலாளர்- அண்ணாமலை குற்றச்சாட்டு

 

பல்லாவரம் பம்மல் அருகே குவாரி உரிமையாளரிடம் மாதம் 3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர் மிரட்டுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் 3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், குவாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். திமுகவினரின் தொடரும் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.