"தாய்நாட்டை இழிவுபடுத்தியுள்ளார் ராகுல் காந்தி" - அண்ணாமலை
அந்நிய மண்ணில் தாய்நாட்டை தாழ்த்தி பேசுவதில் ராகுல்காந்தி மகிழ்ச்சி காண்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்நிய மண்ணில் இருந்து தாய்நாட்டை ராகுல்காந்தி இழிவுபடுத்தி உள்ளார். இந்திய குடிமக்கள் மீது இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸா? ராகுலின் பாட்டி இந்திரா காந்தி காலத்தில் முதல் தேசிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயமாக இருந்தது.
பாஜக கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கைதான் தாய்மொழி வழி கல்விய் ஊக்குவிக்கிறது. 2022 தேசிய கல்விக் கொள்கைதான் முதல் முறையாக தாய் மொழியில் கற்பதை வலியுறுத்துகிறது. இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி ஆட்சியில் இந்தி மொழி கற்றலை கட்டாயமாக்க முயற்சி நடந்தது. 60 ஆண்டு கால ஆட்சியில் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. தாய்மொழியின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் பிரதமர் மோடி” எனக் குறிப்பிட்டுள்ளார்.