×

64 லட்சத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட பள்ளிக் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது- அண்ணாமலை

 

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது. நேற்று விடுமுறை தினமானதால், வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தி ஆகியிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதில் கூட, திமுக அரசு இத்தனை அலட்சியமாகச் செயல்படுவதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா?