×

ஆம்புலன்ஸ் இல்லாததால் 5 வயது சிறுமி உயிரிழப்பு! திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?- அண்ணாமலை

 

 

மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததாலும் 5 வயது சிறுமி சஹானாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமியின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததாலும் 5 வயது சிறுமி சஹானாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமியின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடப்பாண்டு ஆரம்பத்தில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,467 மருத்துவர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தோம். அதன் பின்னர், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதாக திமுக அரசு செய்திகள் வெளியிட்டது. ஆனால், இன்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக மக்கள் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.