×

"சிறுமி மீதும் தவறு உள்ளது".. சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஆட்சியர் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

 

சீர்காழியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் "சிறுமி மீதும் தவறு உள்ளது" என அம்மாவட்ட ஆட்சியர் கூறியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, தமிழக பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.