×

"விநாயகருக்கு எப்படி மரியாதை கொடுக்கிறோமோ? அதேபோல் நாம் செலுத்தும் வாக்குக்கு மரியாதை கொடுக்க வேண்டும்”- அண்ணாமலை

 

விநாயகர் சிலையை கரைக்கும் இளைஞர்கள் ஏரியை சுத்தம் செய்ய 10 நாட்கள் ஒதுக்க வேண்டும் என முன்னால் பா.ஜ.க  மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம் செய்யும் நிலையில் துடியலூர் பகுதியில் நடைபெற்றது. அதன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “இந்து முன்னணி 1980ல் ராமகோபாலன், இதை ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் பட்டி, தொட்டி எல்லாம் விநாயகர் வழிபாடு, அதன் பிறகு அதனுடைய ஊர்வலம் என்பது இந்து மக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்துகிறது. பாலகங்காதர திலக்  இந்த விநாயகர் ஊர்வலத்தை எல்லாம் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தி ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு பெரும் எழுச்சியை மும்பையில் ஏற்படுத்தி வந்திருக்கக் கூடிய மக்களை எல்லாம் தேசிய உணர்வூட்டி பெரிய எழுச்சியோடு அனுப்பி வைத்தார். அதை எதிர்த்து 1893 விநாயகர் பந்தலை பயன்படுத்தி மக்களுக்கு ஒரு தேசிய உணர்வு ஊட்ட முடியும் நிகழ்வாக அதை மாற்றிக் காட்டினார். அதன் பிறகு கடந்த 132 ஆண்டுகளாக இந்தியா முழுவதுமே விநாயகப் பெருமான் விநாயகர் ஊர்வலம் என்பது இந்து மக்களுடைய வாழ்வியலில் ஒன்றிணைந்த நிகழ்வாக மாறி இருக்கிறது.  இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. 

பகவத் கீதை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. அதை எல்லாராலும் படிக்க முடியாது. எல்லோரும் கூட பகவத் கீதை என்னுடைய ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழில் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது நம்முடைய இந்து தர்மத்தின் ஆழ்ந்த அறிவியல். இதை எதற்காக அரசியல் கட்சிகளும் காவல் துறையும் எதிர்க்கிறார்கள் ? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது போன்ற நிகழ்வுகள் மட்டும் தான் இந்தியன் என்கின்ற பெருமைக்குரிய பாரத அடையாளத்தை அந்த மனிதனுக்கு கொடுக்கிறது. இதே போல தமிழ்நாடு முழுவதுமே 2021ல் இருந்து அவர்கள் போட்டு இருக்கக் கூடிய கடுமையான கட்டுப்பாடுகளில் ஒரு தளர்வு வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு பிரச்சனைகள் தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு இளைஞரும் அவர்கள் பகுதியில் இருக்கும் ஏரியை குறைந்தது 10 நாட்கள் ஆவது சுத்தம் செய்ய நேரம் ஒதுக்கி தர வேண்டும். மழைக் காலத்தில் அப்பொழுது தான் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள முடியும்.  அடுத்த ஆண்டு விநாயகரை அங்கு விஷர்சனம் செய்ய முடியும். அதற்கும் இந்து முன்னணி பொறுப்பேற்று அடுத்த ஆண்டுக்குள் ஏரி குளங்களை சுத்தம் செய்வதை இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் இதை எதிர்க் கட்சியின் நண்பர்கள் நம்மை அவமானப்படுத்துவதற்காக விநாயகர் நம்முடைய கடவுளா ? தமிழ் கடவுளா ? என்றெல்லாம் பேசுவார்கள்.

விநாயகர் அகவலில் ஔவை பாட்டி, 1500 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வை பாட்டி விநாயகரை பற்றி எழுதி இருகிறார். கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் எந்த விதமான வெளிப்படை தன்மையும் இல்லை..மூன்று லட்சம் கோடி ஒரு அரசு பட்ஜெட் போட்டும், வருமானம் இல்லை. கோவில் பக்தர்கள் கொடுத்த நகைகளை, பிரித்து அதில் வரக் கூடிய சில கோடிகளை வைத்து தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் என்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகிறது. இன்று கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசு, ஐயப்ப மாநாட்டை கேரளாவில் நடத்துகிறார்கள். விழாவிற்கு சிறப்பு விருந்தினர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் என்ன பேசுவார் என்று அனைவருக்கும் தெரியும். கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசை ஒரு ஃபிராடு,  சபரிமலைக்காக பிரச்சனையை ஏற்படுத்தியவர்கள் என்று ஐயப்பனுக்காக மாநாடு போடுகிறார்கள். கம்யூனிஸ்ட் ஐயப்பனுக்கு கேரளாவில் மாநாடு எடுத்தால் இந்து முன்னணி என்ன செய்ய முடியும்? ஐந்தரை லட்சம் ஏக்கர் இருக்கிறது, 46 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது, ஆனால் கோவில் சொத்துக்கள் மூலமாக வரக் கூடிய வருமானம் மட்டும் வெறும் 300 கோடி தான். 2026 சட்டமன்ற தேர்தலில் நம்முடைய வாக்கை செலுத்துவதற்கு முன்பாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டும், விநாயகருக்கு எப்படி? நாம் மரியாதை கொடுக்கிறோமோ? அதேபோல நாம் செலுத்தும் வாக்கு இருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.