×

சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை- சிசிடிவியை வெளியிட்டு அண்ணாமலை வேதனை

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அந்த வீடியோ காட்சியை பதிவிட்டு, “திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. குற்றம் நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சிறுமி என்றும் பாராமல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இது போன்ற குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதே சமுதாயம் எத்தனை ஆபத்தான சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.