ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? - அண்ணாமலை கேள்வி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் தாக்குதல் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது தாமதம் ஏற்பட்டதாக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சம்பவத்துக்கு 10 நாட்கள் கடந்தும் குற்றவாளி கைது செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் போராட்டத்திற்குப் பிறகு தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும், அதே நபர் 2020ஆம் ஆண்டு பாலியல் கொலை வழக்கில் 2024ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றவராக இருந்தும், ஜாமீனில் வெளிவந்ததை சுட்டிக்காட்டி, காவல்துறை கண்காணிப்பில் குறைபாடு உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். சிசிடிவி ஆய்வில் தாமதம் ஏற்பட்டதையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை முதல்வர் விளக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.