முதல்வர் நிகழ்ச்சிக்காக தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளை கேட்பதா?- அண்ணாமலை கண்டனம்
Apr 10, 2025, 16:53 IST
உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா? எதற்காக, சாமானிய மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் சுற்றறிக்கை ஒன்றை பதிவிட்டு அதில், “வரும் 19.04.2025 அன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியில், முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கவிருப்பதாகவும், அதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகளில் இயங்கும் பேருந்துகளை, இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.