×

ஆ. ராசா பேசியது உண்மைதான் - அண்ணாமலை

 

திமுக MP ஆ.ராசா பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியானது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தி.மு.க. ஆட்சி தமிழக வரலாற்றிலேயே மிக மோசமானது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு மகளிருக்கு கொடுத்தது ரூ.37,000. அதாவது ஒரு நாளைக்கு ரூ.20. ஆனால் திமுக அரசு வாங்கிய கடன் நாளொன்றுக்கு ரூ.150 என மொத்தம் ரூ.6 லட்சம் கோடி. இதற்கு பெயர்தான் கருணாநிதித்தனம். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக திமுக எம்பிஆ.ராசா பேசியது முற்றிலும் உண்மை, இது அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆடியோ வெளியானதால் தான் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் உள்ள ஆ.ராசாவை பிரச்சாரம் செய்ய அனுமதிக்காமல் திமுக முடக்கி வைத்திருக்கிறது” என்றார்.