விஜய்யை சாதாரணமாக எடை போடவில்லை- அண்ணாமலை
தவெக தலைவர் விஜய்யை சாதாரணமாக எடை போடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தவெக தலைவர் விஜய்யை சாதாரணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். திமுக வேண்டாம் என நினைத்தால் யார் வேண்டும் என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் களத்தில் யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம். பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது உள்ள நான்கு முனை போட்டி இருமுனை போட்டியாக மாறும். சிவகார்த்திகேயன் பராசக்தியிலும் நடித்திருக்கிறார். அமரன் படத்திலும் நடித்தார். கதை பிடித்திருந்ததால் நடிக்கிறார். ஒரு படத்தில் நடிப்பதால் அதன் சித்தாந்தத்தில் அடைக்கக்கூடாது. நாம் தமிழர் கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை, 8 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகளைப் பெற்ற கட்சி நாதக.
விஜய் கூட்டணிக்கு வர வேண்டும், வர வேண்டாம் என்பது கருத்தாக இருக்க முடியாது. தலைவர்கள்தான் முடிவெடுப்பார். அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஏற்கனவே பலமாக தான் இருக்கிறது. தவெகவில் அண்ணன் செங்கோட்டையன் உட்பட பலர் இணைந்திருக்கிறார்கள். களத்தில் பார்க்கிறேன். தவெக தொண்டர்கள் பரபரப்பாக வேலை செய்கிறார்கள். சீமான் திராவிட கட்சிகள் வேண்டாம் என்கிறார், விஜய் திமுக வேண்டாம் என்கிறார், அப்போது யார் வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். அதிமுக- பாஜகவுக்கு சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் இணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி பலமாக இருக்க வேண்டும். முரண்பாடு உள்ளவர்கள் ஒன்றிணைப்பது பிரச்சனை. சிக்கன், மட்டன், வெஜ் பிரியாணி எல்லாம் கலந்தால் கெமிஸ்ட்ரி இருக்காது. 24 மணி நேரம் விரதம் இருந்தால், கேன்சர் செல்லுக்கு போகும் எனர்ஜியை கட்டாகி கேன்சர் செல் செத்துவிடும். எல்லார் உடம்புலயும் கேன்சர் செல் இருக்கும். அது அதிகமாகும் போது தான் பிரச்சினை. ஒரு வருஷத்திற்கு நம்ம உடம்ப முழுசா கிளீன் பண்ணனுமா? 7 நாள் விரதம் இருங்க.. மொத்த கேன்சர் செல்லும் செத்துரும்” என்றார்.