"என்னால நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று முதல்வர் சொன்னால், மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்”- அண்ணாமலை
ஜிங் ஜாங் போடுபவங்களை தவிர மக்களுக்காக பேச காங்கிரஸில் யாரும் இல்லை என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக ஜோதிமணி கூறியது தொடர்பான கேள்விக்கு வேலூரில் பதில் அளித்த அண்ணமலை, “காங்கிரஸை பொறுத்தவரை யார் அதிகமாக டெல்லி ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு யார் ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப். இந்த 2 ஜிங் ஜாங் போடுபவர்களை தவிர மக்களுக்காக பேச யாரும் இல்லை. என்னால் தமிழகத்தை, காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று முதல்வர் சொன்னால், மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
பலவிதமான போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. போதை பொருட்களை தடுக்க முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்? வெளிநாட்டில் இருந்துவரும் போதை பொருட்களை மத்திய அரசு தடுக்கும். முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி யாராவது பாடம் எடுக்க வேண்டும். மாநில முதல்வரின் பொறுப்பு என்ன என்பதே அவருக்கு தெரியவில்லை. இங்கு நிர்வாகம் செய்ய முடியவில்லை, என்னால் தமிழகத்தை, காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று முதலமைச்சர் சொன்னால், மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். ” எனக் கேள்வி எழுப்பினார்.