அமித்ஷா, நட்டாவுடன் பூட்டிய அறையில் பேசிய கருத்துகளை வெளியே சொல்ல முடியாது- அண்ணாமலை
மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா உடன் பேசியதை பொதுவெளியில் சொல்ல முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா உடன் பேசியதை பொதுவெளியில் சொல்ல முடியாது. அவர்களுடன் பூட்டிய அறையில் எல்லா கருத்துகளும் பேச, எங்களுக்கு உரிமை உண்டு. கூட்டணியில் ஒருவர் இருந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறோம். 2021, 2024 தேர்தல் அனுபவங்களில் இருந்து சில கருத்துக்களை கூறியுள்ளோம். 2026ல் தமிழ்நாட்டில் 4 முனைத் தேர்தலாக அமையும். NDA கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் இடம் பெறுவார்களா என்பது தேசிய தலைவர்கள் அதனை முடிவு செய்வார்கள்.
தமிழ்நாட்டில் தலைமை தாங்கும் ஈபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆகியோர் அறிவிப்பார்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது. தமிழ்நாட்டில் NDA வலிமையாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். தீர்ப்பு கொடுத்தால் இப்படிதான் நடக்கும் என நீதிபதிகளுக்கு பயத்தை கொடுத்துள்ளது திமுக. கடந்த 8 ஆண்டுகளில் 75,000 வழக்குகளை முடித்துள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.. இந்திய அரசியல் சரித்திரத்தில் முதன் முதலாக ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக அவருக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர் மீது பல அவதூறுகளை தி.மு.க.வினர் பரப்புகின்றனர். திமுகவினர் நீதிபதியின் மாண்புக்கு பங்கம் விளைவித்துள்ளனர். நேர்மையாக பணியாற்ற இடமில்லை. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல் கிடையாது. அரசு பொய் சொல்கிறது. அதிமுக- பாஜக கூட்டணிக்கு இன்னும் முக்கிய கட்சிகள் வர வேண்டியுள்ளது” என்றார்.