பிரதமரை ஓபிஎஸ் சந்திக்காதது ஏன்?- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மகிழ்ச்சி அளிக்கிறது. அதே வேலையில் 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது, முதல்வர் 4 ஆண்டுகளில் என்ன பணி செய்து இருக்கிறார்கள் என்ற பட்டியலை மக்களிடம் வெளியிட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, “கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் வந்தது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வருகை. அரியலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது, காரணம் ஆட்சியாளர்கள் அரியலூரில் மீது தனி கவனம் செலுத்தவில்லை. பிரதமரின் வருகை தமிழகத்தினுடைய பெருமையாக பார்க்கிறோம். கங்கைகொண்ட சோழபுரம் 1025ல் கட்டப்பட்ட கோவில் 250 ஆண்டுகள் பழமையான நகரம். இன்று பிரதமரின் வருகைக்கு பிறகு ஒரு மைய புள்ளியாக மாறும். இது அரியலூர் மாவட்டத்திற்கு ஒரு பெருமை. நம் கலாச்சாரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது, இன்னும் கலாச்சாரத்தை அரசர்கள் எப்படி கொண்டு சென்றார்கள் என்பதையெல்லாம் பிரதமர் கூறினார். வாரணாசி காசியினுடைய எம்பி தீர்த்தத்தை கொண்டு வந்தார்கள், அதில் தான் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கங்கையும் காவேரியும் கலப்பதற்கு ஒரு வாய்ப்பாக பிரதமருடைய வருகை இருந்ததாக நான் பார்க்கிறேன். இதில் அரசியல் எதுவும் இல்லை. நேற்று தூத்துக்குடியின் விமான திறப்பு விழா நடைபெற்றது. 24 மணி நேரமும் விமான சேவை தென்தமிழகம் தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு இரவு நேர விமான சேவை தொடங்குகிறது. மும்பை டெல்லிக்கு விமான சேவையும் தொடங்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்திருந்தார்கள். இனி 24 மணி நேரமும் அங்கு விமான சேவை இருக்கும். இது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது அது இன்று நிஜமாகியுள்ளது.. பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை, அது குறித்து கருத்து சொல்ல முடியாது.
நதிநீர் இணைப்பு என்பது பாஜகவின் ஒரு கொள்கை முழக்கம் தான். நதிநீர் இணைப்பை பாஜக நிச்சயம் நிகழ்ந்து காட்டிய தீரும், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கோதாவரி காவேரி என்னுடைய இணைப்பு மிக முக்கியமான ஒன்று. இந்த இணைப்பு என்பது நடத்தப்பட வேண்டிய ஒன்று, அது ஒரு அரசியல் தலைவரால் முடியும் என்றால் அது பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நிச்சயமாக அதற்கான காலம் வரும். விவசாய கடனில் சிபில் ஸ்கோர் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து கொண்டு தான் இருக்கிறது. விவசாயிகள் சிபில் ஸ்கோரை கொண்டு வருவது கஷ்டம் மத்திய அரசு யாரிடமும் சிபில் ஸ்கோர் கட்டாயம் என்று சொல்லவில்லை. வங்கி கணக்கை வைத்திருக்கக்கூடிய வங்கிகள்தான் சிபில் ஸ்கோரை கட்டாயப்படுத்துகிறார்கள். விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்டால் அது தவறான அணுகுமுறை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும். அகில இந்திய அளவில் மாநில தலைவர்கள் மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறார்கள், இன்னும் நிறைய வேலைகள் உள்ளது. இங்கு எல்லோரும் சாதாரண தொண்டர்கள் தான் என்ன பொறுப்பு கொடுக்கிறார்களோ அதை சரியாக செய்பவர்கள். பொறுப்பு கொடுத்தாலும் பொறுப்பு கொடுக்க வில்லை என்றாலும் அதே வேலையை தான் செய்யப் போகிறோம்.. பொறுப்பிற்காக எங்களுடைய வேலையை குறைத்துக் கொள்ள முடியாது. கட்சி இந்த பொறுப்பை கொடுத்து செய்ய சொன்னால் செய்து முடிக்க வேண்டும், அது எந்த பொறுப்பாக இருந்தாலும் சரி.. இன்று மாநில அரசியலை செய்ய சொல்லி இருக்கிறார்கள் அதை செய்து கொண்டிருக்கின்றோம். கட்சி மற்றொரு பொறுப்பை கொடுத்து செய்ய சொன்னால் செய்வேன்.
முதலமைச்சர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மகிழ்ச்சி அளிக்கிறது. மாநிலத்தை காக்க கூடியவர்கள் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் அனைவருக்கும் சோகமான செய்தி தான். உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே வேலையில் 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது, முதல்வர் 4 ஆண்டுகளில் என்ன பணி செய்து இருக்கிறார்கள் என்பதை பட்டியலை மக்களிடம் வெளியிட வேண்டும். அதற்கான நேரம் இது. திமுக 511 வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா? நான்கு ஆண்டுகளில் தமிழகம் மாறி இருக்கின்றதா? மத்திய அரசின் மீது தொடர்ந்து பழி போடக்கூடிய செயலை யாரும் எதிர்பார்க்க போவதில்லை” என்றார்.