சீமானின் பாதை வேறு, பாஜகவின் பாதை வேறு!- அண்ணாமலை
புயல் பாதிப்புகள் குறித்து அரசியல் பேசுவதை விட ஆக்கபூர்வமானதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தமிழகம் திரும்பினார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை மேற்கொள்ளச் சென்ற அண்ணாமலை, 3 மாத படிப்பு முடிந்து இன்று தமிழ்நாட்டுக்கு வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அண்ணாமலைக்கு பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “புயலின் பாதையில் சென்னை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஒன்று குளோபல் வாம்மிங். இன்று அதிகம் உற்பத்தியாக கூடிய புயலானது டெல்டா டெல்டா பகுதிகள் சென்னையை கடந்து ஆந்திரா நோக்கி செல்கிறது நம்முடைய தட்பவெப்ப நிலை அதிகமாகியுள்ளது. இதனால் தமிழகம் முதல்வர் உடனடியாக குளோபல் வார்மிங் காரணத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் பேரிடர் பகுதிகளாக மாறி உள்ளது. அதனால் முதலமைச்சர் உடனடியாக உயர்மட்ட அறிவியல் குழு ஒன்றை உருவாக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் தமிழர் சீமானின் பாதை வேறு, பாஜகவின் பாதை வேறு. சீமான் அவர் பாதையில் செல்வார். நாங்கள் எங்கள் பாதையில் செல்வோம் விஜய்யின் அரசியல் வருகைக்கு வரவேற்கிறேன். வரும் காலங்களில் உதயநிதியை எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு விமர்சிப்போம். நன்றாக செயல்பட்டால் பாராட்டுவோம். புதிய கட்சிகளை பார்த்து பாஜக பயப்படாது. திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். கேள்வி கேட்கிற இடத்தில் விஜய்யிடம் பாஜக கேள்வி கேட்கும்” என்றார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு விமான நிலையங்களில் செய்தியாளர்களிடம் பேசமாட்டேன் என்று சொல்லியிருந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.