×

திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்: அண்ணாமலை

 

தேர்தல் வரலாற்றில் முதல் தலைமுறை வாக்களார்கள் அதிகம் இருக்கக்கூடிய தேர்தல் இது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “அரசியல் தெரியாதவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்... பிடித்த தலைவர்களுக்கு ஓட்டுப் போடுவதற்கான தேர்தல் அல்ல இது தேர்தல் வரலாற்றில் முதல் தலைமுறை வாக்களார்கள் அதிகம் இருக்கக்கூடிய தேர்தல் இது. தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச் சந்தித்துள்ளது. தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறியத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். போதைப்பொருட்களின் கூடாரமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகவும் மாறியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், சாமானிய மக்களை வஞ்சித்து, ஊழலில் திளைக்கும் இந்த கமிஷன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது. திமுக தேர்தல் அறிக்கை Cut -Copy- Paste தான்.” என்றார்.