×

டிடிவி தினகரன் NDA கூட்டணியில் இணைந்ததை வரவேற்கிறேன் - அமித்ஷா

 

NDA கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்ததற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில், “வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி... திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர். வளமான தமிழ்நாட்டிற்காக வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.