அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி- அமித்ஷா
Apr 11, 2025, 17:35 IST
அண்ணாமலைக்கு பாஜகவில் தேசிய பொறுப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில், “பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது. பிரதமர் மோடியின் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்த்ததில் அண்ணாமலையின் பங்கு மெச்சத்தக்கது. பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.