“மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 1 ரூபாய் கூட அதிகரிக்கவில்லை” - அமித்ஷா
புதுவை மாநிலத்தில் வரும் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைப்பெற உள்ள நிலையில், நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில் இன்று மாலை புதுச்சேரி மாநிலம் மண்ணாடிபட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதுவை மாநில உள்துறை அமைச்சரும் வேட்பாளருமான நமச்சிவாயத்தை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார்.
அப்பொழுது அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, “நண்பர்களே 9 ஆம் தேதி 3 நாளிலேயே தேர்தல் நடக்க உள்ளது. இரண்டாவது முறையாக புதுச்சேரியில் மோடி ஆட்சியை அமைக்க வேண்டும். புதுச்சேரியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் நாராயணசாமி அரசு பின்னோக்கிய அரசாக இருந்தது. இதனை சரி செய்ய 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினுறும் ஒற்றுமையாக உள்ளோம், ஆனால் தற்போது எதிர் கூட்டணியில் பதவிக்கு சண்டை போட்டு இருக்காங்க. இரு கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியாக போட்டியிடுறாங்க. நாரயாணசாமி ஆட்சியில் ஊழல் தான் நிறைந்தது, இட ஒதுக்கீடு சீட்டைக்கூட கூவி, கூவி விற்று ஊழல் செய்தனர். சி.ஏ.ஜி அறிக்கையில் சொன்ன 15 ஆயிரம் கோடி ஊழல் பணத்தில் 3 பட்ஜெட் போட்டு இருக்கலாம். இரண்டு நாள் முன்னாடி ராகுல்காந்தி புதுவை வந்திருந்தார், அவர் சொன்னார், வளைகுடா நாடுகளின் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது என்று சொல்லியிருக்கார். ராகுல் காந்தி கனவு உலகத்தில் உள்ளார், விலை உயர்ந்துள்ளது உண்மைதான், அது நீங்கள் எப்போதும் நேசிக்கும் பாகிஸ்தானில் தான், இந்தியாவில் உயரவில்லை.
உலக முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு, வேலைக்கு செல்ல முடியவில்லை, ஆனால் இந்தியாவில் விலை ஒரு ரூபாய் கூட ஏரவில்லை, தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. புதுவை தகவல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய உயரம் வரவேண்டும் , இங்கு ஓர் ஆண்டுக்கு 3 லட்சம் லேப்டாப் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோம். விவசாயிகள் உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ. 8000 ஆக உயர்த்தப்படும்.விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஒரு பசு.மாடு அல்லது இரு ஆடுகள் வழங்கப்படும். இப்படி எல்லாம் ஒவ்வொருத்துறையா பார்த்து வளர்ச்சி திட்டங்களை கொடுக்கிறோம், ஆனால் ராகுல் காந்தி இங்கு வந்து பாகிஸ்தான் பற்றி பேசி வருகின்றார். 9 ஆம் தேதி தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்களா, ரங்கசாமி கரத்தை வலுப்படுத்தூர்களா, பிரதமர் மோடி கரத்யை உயர்த்துவிர்களா, இரு கரத்தையும் உயர்த்துங்க” என வணக்கம் என்று தமிழில் சொல்லி முடித்தார்.