×

மோடியை வரவேற்க பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

 

 

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ள நிலையில் அதிமுக, பா.ஜ.க கொடியுடன் சேர்ந்து விசிக கொடியும் வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை தர உள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் ஹெலிபேட் மைதானம் அமைந்துள்ள பொன்னேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு வருகை தருகிறார். நாளை பிற்பகல் சரியாக 12 மணிக்கு வருகை தர உள்ள பிரதமர் மோடியின் கால்வாய் அணிவகுப்பு ஒத்திகையானது கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ள நிலையில் அதிமுக, பா.ஜ.க கொடியுடன் சேர்ந்து விசிக கொடியும் வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருவதால், விசிக தலைவரும் அத்தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் கலந்து கொள்ளலாம் என நினைத்து, விசிக-வினர் கொடியை நட்டுள்ளதாக சொல்லப்படுகிறது