பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பற்றது! புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கண்டுபிடிப்பு
பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான புரோமேட் (Bromate) மற்றும் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய PAHs வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பிஸ்லெரி நிறுவனத்தில் எடுக்கப்பட்ட மாதிரி குடிநீரில் புற்றுநோய் உண்டாக்கும் புரோமேட் மற்றும் பாலி நியூக்ளியர் ஆரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் அதிகமாக இருப்பது இரு ஆய்வக சோதனைகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் ஆய்வில் புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியதால் குடிநீர் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இரண்டாவது ஆய்விலும் PAHs வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதால், மாதிரி பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்டது. பிஸ்லெரி குடிக்க குடிக்க பாதுகாப்பற்றது என அறிவித்து பிஸ்லெரி நிறுவனத்துக்கு எதிராக உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2006-ன் கீழ் வழக்குத் தொடர FSSAI அனுமதி வழங்கியுள்ளது.